Monday, August 30, 2010

Tuesday, August 10, 2010

Alaveddy Nursery Sports Festival 2010 - Some shots

Prize Giving

Spectators

Miss. Jeyapriya leads the drill of children

The Parish Priest welcoming the guests

A teacher does Nursery Flag hoisting 

Mrs.Sugirthanayaki, Family Health Officer, Alaveddy besides Jeevasutha, A teacher of the nursery

Mrs. Tharmapalasundaram, The Principal of RCTM School, Alaveddy lights the traditional lamp, besides Mr.Jeganathan, Principal of Arunachchalam Vidyalayam, Alaveddy and Grama Sevaka. Mr. Poopalasingam

The final session: Vote of thanks done by the Parish Priest

Saturday, August 7, 2010

ஆகஸ்டு 8, 2010 ஞாயிறு நற்செய்தி

ஆகஸ்டு 8, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு


Ps 33:1, 12, 18-22
Heb 11:1-2, 8-19
Luke 12:32-48

2 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45 - 51)
35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார்.42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.45 ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.




இன்றைய நற்செய்தியில், கடவுள் அவரது இறையரசை நமக்கும் தர திருவுளம் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த இறையரசு, நமது மோட்சத்திற்கும் , கடவுளின் நம் மேல் கொண்டுள்ள அன்பினால் நமக்கு இவ்வுலகில் கிடைக்கும் பயன்கள் பல.

கடவுள் நமக்காக எவ்வித நல்ல விசயங்களையும், பலன்களையும் அவருக்குள் வைத்து கொண்டு, நம்மை காத்திருக்க சொல்ல வில்லை. ஆனால், அதனை நாம் பயன்படுத்துகிறோமோ?

இயேசு இவ்வாறு விளக்குகிறார்: கடவுளின் அன்பையும், தாராள அன்பளிப்புகளையும், மற்றவர்களோடு பகிராமால், இந்த உலகின் செல்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், உங்கள் கைகளில் இருப்பவை அனைத்தும், சிறிது காலம் கூட உங்களுடன் இருக்காது. உங்கள் பணப்பைகள், இவ்வுலக நோக்கத்தால், கடவுளை வெளியே தள்ளுகிறீர்கள், மற்றவர்களையும் ஒதுக்குகிறீர்கள், கடவுளுக்கு உதவாத உறுவுகளால், நம் பரிசுத்த வாழ்விலிருந்தும் விலகுகிறோம். கடவுளின் அற்புதமான மற்றும், நித்திய அன்பளிப்புகளுக்கும் நாம் இடம் கொடுக்காமல் இருக்கிறோம். "உங்கள் மதிப்பும், பொருட்செல்வமும் எதனை பற்றி இருக்கிறதோ, அதில் தான் உங்கள் மனசும் செல்லும்."

கடவுளுக்கு உதவாத , ஒத்து வராத எதுவும் நமக்கு தீங்கிழைக்க கூடியது, மேலும் இறுதியாக நாம் விரும்பும் எதுவும் ஒன்றுமில்லாமல் போகும். ஏனெனில், அது நம்மை கடவுளோடு இனைப்பதில்லை, நம்மை மோட்சத்திற்கும் அழைத்து செல்வதுமில்லை. நாம் இந்த அழியும் விருப்பங்களையும், கடவுளின் அழியாத செல்வங்களுக்காக நாம் விட்டு விட வேண்டும்.

இயேசு ஒன்றும் நமது செல்வங்கள் அனைத்தையும், கடவுளின் செல்வங்களுக்காக நாம் விற்று விட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், கடவுளின் செல்வங்களை நோக்கி நமது எண்ணம் இருக்கவேண்டும். அது தான் முக்கியம். அந்த செல்வங்கள் எல்லாம் கடவுளரசிற்காக உபயோகப்படவேண்டும்.

நம்மை கடவுளோடு இனைப்பது எதுவெல்லாமோ, அதெல்லாம் தான் நமது செல்வமாகும், அதன் பலனை நித்திய வாழ்விலும் நாம் அனுபவிப்போம். 

நாம் இவ்வுலக ஆசைகளினால், நமது நேரத்தை செலவிட்டு வீணாக்க வேண்டாம் என்று யேசு நம்மை எச்சரிக்கிறார். நமது கடவுள் எப்பொழுது நம்மை இவ்வுலகை விட்டு அழைத்து செல்வார் என்று நமக்கு தெரியாது. அவர் நம்மை எடுத்து சென்று , மோட்சத்தில் நம்மை அவரோடு இனைத்து கொள்வார். நாம் தயாராய் இருக்கிறோமோ? அல்லது, இவ்வுலக செல்வங்களுக்காக நாம் விரும்பி, அதற்காக உழைக்கிறோமோ? 

அதனால் தான், கடவுள் அவரது இரக்கத்தினால், நமக்கு உத்தரிக்கிரஸ்தலத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். நமது இவ்வுலக செல்வங்களை, ஆசைகளை ஒழித்தொழிக்க தான், உத்தரிக்கிறஸ்தலத்தை நமக்கு கடவுள் கொடுத்துள்ளார். அதை தான் சிறிதே கடவுளிடமிருந்து அடிபடுவான் என்று இயேசு சொல்கிறார். அதற்காக ஏன் காத்திருக்க வேண்டும், இன்றே நாம் கடவுளரசின் செல்வத்திற்காக உழைத்து , எந்த ஒரு திருடனும் திருட முடியாத நித்திய செல்வங்களை சேர்ப்போம்.



நன்றி: அருள்வாக்கு

Wednesday, August 4, 2010

அமெரிக்கன் சிலோன் மிஸன் முன்பள்ளி அளவெட்டி வருடாந்த விளையாட்டு விழா 2010

அமெரிக்கன் சிலோன் மிஸன் முன்பள்ளி அளவெட்டி
வருடாந்த விளையாட்டு விழா 2010

இடம்: அளவெட்டி ஆலய வளாகம்
காலம்: 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.00 மணி
தலைவர்: அருட்திரு. ம. யூட் சுதர்சன்
(அருட்பணியாளர், அளவெட்டி ஆலயம்)

பிரதம விருந்தினர்:
திரு. எஸ் குகதாசன் அவர்கள் (முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர், வலிகாம வலயம்)

கௌரவ விருந்தினர்கள்:
திரு. ந. தம்பிமுத்து (பதில் நீதவான், மாவட்ட நீதவான் நீதிமன்றம், மல்லாகம்.)
திரு. கு, nஐகநாதன் (அதிபர், யா-அருணாசலம் வித்தியாலயம், அளவெட்டி)
திருமதி. வா. தர்மபாலசுந்தரம்  (அதிபர், யா-றோ.க.த.க பாடசாலை, அளவெட்டி)
திரு. ந. புரட்சிதாசன், (சமூகசேவை உத்தியோகத்தர், தெல்லிப்பழை பிரதேச செயலகம்)

சிறப்பு விருந்தினர்கள்:
திரு. எம். பத்மநாதன் (இளைப்பாறிய உப அதிபர், யா-அருணோதயா கல்லூரி, அளவெட்டி)
திருமதி. Nஐ. அன்ரனிப்பிள்ளை (இளைப்பாறிய அதிபர், யா-அளவெட்டி றோ.க.த.க பாடசாலை)
திரு. எஸ். பூபாலசிங்கம் (கிராமசேவையாளர், அளவெட்டி மேற்கு Nஐ-220)
திருமதி. க. சுகிர்தநாயகி (குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர், அளவெட்டி)
போதகர். சிவசிதம்பரநாதன்  (போதகர், கல்வாரி பூரண சுவிசே~ தேவாலயம், அளவெட்டி)
திரு. எஸ். தயாபரன்  (சமுர்த்தி உத்தியோகத்தர், அளவெட்டி)
திருமதி. தே. கு. லில்லிராணி (முன்பள்ளி இணைப்பாளர், வலி வடக்கு பிரதேசம்)

நிகழ்ச்சிநிரல்:
1. விருந்தினர் கௌரவிப்பு
2. மங்கள விளக்கேற்றல்
3. இறைவணக்கம்
4. கொடியேற்றம்
5. சத்தியபிரமாணம்
6. வரவேற்புரை
7. பிரதம விருந்தினர் விழாவை ஆரம்பித்துவைத்தல்
8. மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள்
9. பழைய மாணவர் நிகழ்ச்சி
10. பெற்றோர் நிகழ்ச்சி
11. தலைவர் உரை
12. கொளரவ விருந்தினர் உரை
13. பிரதம விருந்தினர் உரை
14. பரிசில் வழங்கல்
15. நன்றியுரை

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கனம்,
அருட்பணியாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்
அமெரிக்கன் சிலோன் மிஸன் முன்பள்ளி